மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
4927 days ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
4927 days ago
திருவேங்கடம் : சுப்புலாபுரம் கோயிலில் வரும் 11ம் தேதி மாசி பொங்கல் திருவிழா நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயிலில் மாசி பொங்கல் திருவிழா வரும் 11ம் தேதி நடக்கிறது. அன்று மாலை மேளதாளத்துடன் அம்மன் அழைப்பு, ஊர் விளையாடல், இரவு 9 மணியளவில் பெரியூர் முத்துராமலிங்கம் குழுவினரின் வில்லிசை ஆகியன நடக்கிறது. நள்ளிரவுக்குப்பின் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேக அலங்காரம், கும்பம் எடுத்து வந்து பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு, தீபாராதனை ஆகியன நடக்கிறது.ஏற்பாடுகளை சுப்புலாபுரம் வடக்குத்தியம்மன் கோயில் அக்தார்கள் முத்துவீரப்பன், நடராஜன், விழாக் கமிட்டியார், பொதுமக்கள் செய்துள்ளனர்.
4927 days ago
4927 days ago