ஆழ்வை., கோயிலில் மாசித்திருவிழா
ADDED :4928 days ago
ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் புறப்பாடு நடந்தது. காலையில் கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை வீதி புறப்பாடும், மாலை வாகன புறப்பாடும் நடக்கிறது. விழாவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், பஞ்.,தலைவர் ஆதிநாதன், ஸ்ரீவை.,ஸ்தலத்தார் வெங்கிடாச்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியதிருவடி தலைமையில் காரிமாறன் கலை காப்பகத்தினர் செய்திருந்தனர்.