உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதியோகி திவ்ய தரிசனம்: பக்தர்கள் உற்சாகம்

ஆதியோகி திவ்ய தரிசனம்: பக்தர்கள் உற்சாகம்

 கோவை, : ஈஷா யோக மையத்தில் நடந்த ஆதியோகி திவ்ய தரிசனம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.கோவை ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, ஆதியோகி திவ்ய தரிசனம் எனும், 3டி ஒளி, ஒலி காட்சியை, கடந்த மகா சிவராத்திரி நாளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்.இந்நிலையில், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில், ஆதியோகி, 3டி ஒலி, ஒளி காட்சிகள் இடம்பெறவுள்ளன. இரவு, 8:00 மணிக்கு துவங்கி, 15 நிமிடங்கள் காட்சி இடம் பெறும். இதன்படி, நேற்று திவ்ய தரிசன நிகழ்ச்சி நடத்தப்பட்டது, பார்வையாளர்களை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !