உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா

அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா

 பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

இக்கோயிலில் விழா கொடியேற்றத்துடன் கடந்த வாரம் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் அருள்பாலித்தார். பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி எடுத்தும், பூக்குழி, பால் குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன் தினம் இரவு அம்மன் குதிரை வாகனத்தில் வீதிவுலா வந்தார். சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !