உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோயிலில் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

காமாட்சியம்மன் கோயிலில் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

வால்பாறை: காமாட்சியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபட்டனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி நேற்று பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர்.


மாலை, 5:00 மணிக்கு முப்பெரும் தேவிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது. இன்று (7ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு மோட்சம் தனை அளிக்கும் மோகன வள்ளிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடக்கிறது.விழாவில், நாளை (8ம் தேதி) காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மருதமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !