மழை பெய்ய வேண்டி பவானியில் சிறப்பு யாகம்
ADDED :2344 days ago
பவானி: மழை பெய்ய வேண்டி, பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது.
தற்போது வெயில் அதிகம் வாட்டி வருவதாலும், அதன் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டி வருணபகவானுக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், சிவனுக்கு முன்புள்ள நந்திக்கு சிறியதாக தொட்டி அமைக்கப்பட்டது. அதில் தண்ணீர் ஊற்றி, பால், நெய் மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மழை பெய்ய வேண்டி நேற்று (மே., 7ல்) யாகம் நடத்தப்பட்டது.
இதனால் மழை வரும் என்பது ஐதீகம். இது தொடர்பாக, அதிகாரிகள் யாரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால், யாகத்தின் போது பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.