சேலத்தில், கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :2345 days ago
சேலம்: சேலத்தில், இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் வரதராஜனை நேரில் சந்தித்து, நேற்று (மே., 6ல்)தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த தென்கரை கோட்டை கிராம மக்கள் வழங்கிய புகார் மனு விபரம்: எங்கள் கிராமத்தில், கல்யாணராமர், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பராமரிப்பின்றி சிதிலமடைந்து, வாரத்தில் சனிக்கிழமை ஒருநாள் மட்டுமே பூஜை நடக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக, கோவில் திருப்பணி குடமுழுக்கு நடக்காதது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, திருப்பணி குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.