தர்மபுரி அருகே, 50 ஆண்டு கால பழமையான சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?
ADDED :2345 days ago
தர்மபுரி: தர்மபுரி அருகே, 50 ஆண்டுகால பழமை வய்ந்த சிவன் கோவிலை, சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், குப்பூர் அருகே, கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, சிவன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 1969ல் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு, சொந்தமாக அப்பகுதியில் பல ஏக்கர் நிலம் உள்ளது. இதை, அங்குள்ள சிலர் அனுபவித்து வருகின்றனர். தற்போது இந்த கோவில் சுவற்றில், அரச மரம் வளர்ந்து கோவில் கட்டடத்தை சேதப்படுத்தி வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்த இந்த கோவில், தற்போது சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். 50 ஆண்டு கால பழமையான இக்கோவிலை, சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.