உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் கோவிலில் மழைவேண்டி வருண ஜெபம்

திருவந்திபுரம் கோவிலில் மழைவேண்டி வருண ஜெபம்

கடலூர்:திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் மழை வேண்டி நடந்த வருண ஜெபம் நிகழ்ச் சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் மழை பெய்ய வேண்டி வருண ஜெபம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதனையொட்டி செங்கமலத்தாயார் சமேத தேவநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து பள்ளி கொண்ட ரங்கநாத பெருமாள் சன்னதியில் கோவில் பட்டாச்சாரியார் தலைமை யில் 30க்கும் மேற்பட்ட வேத விற்ப்பன்னர்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓதி, வருண ஜெபம் செய்தனர்.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !