விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் ரூ.19.69 லட்சம் காணிக்கை
ADDED :2453 days ago
விருத்தாசலம்:விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களில் 19 லட்சத்து 69 ஆயிரத்து 837 ரூபாய் காணிக்கை இருந்தன.
விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 நிரந்தர உண்டியல்களை திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று (மே., 7ல்) நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி தலைமையில் செயல் அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், கோவில் மேலாளர் குருநாதன் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்றனர்.அதில், 19 லட்சத்து 69 ஆயிரத்து 837 ரொக்கம், 25 கிராம் தங்கம் மற்றும் 680 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இதேபோல், கடந்த ஜனவரி உண்டியல் திறப்பின்போது, 17 லட்சம் ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.