அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2350 days ago
அந்தியூர்: அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மழை வேண்டி வருண பகவானுக்கு, சிறப்பு யாகம் நேற்று (மே., 7ல்) நடந்தது.
அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் குருக்கள் ராஜா தலைமை வகித்தார். சிவாச்சாரியார்கள் நீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க கலசங்கள் வைத்து, வருண ஜபம், வருண சூக்த வேத
பாராயணம், வருண காயத்ரி மந்திரங்கள் ஓதினர். விழாவில் மக்களும் கலந்து கொண்டனர்.