உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் வருண யாக பூஜை

மழை வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் வருண யாக பூஜை

ராமேஸ்வரம்:மழை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வருண யாக பூஜை, மகாதீபாராதனை நடந்தது.

தமிழகத்தில் போதிய மழையின்றி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மழை வேண்டி திருக் கோயில்களில் வருண பூஜை நடத்த இந்து அறநிலைதுறை உத்தரவிட்டது. அதன்படி நேற்று (மே., 8ல்) ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் சேதுமாதவர் தீர்த்த குளத்தில் இறங்கி வருண யாக பூஜை செய்தனர். பின் சேதுமாதவர் சன்னதி முன்பு நடந்த யாக பூஜையில் மகா தீபாரதனை நடத்தி, கலசத்தில் இருந்த புனித நீரை தீர்த்த குளத்தில் ஊற்றி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு நந்திஈஸ்வர் சிலை க்கு சிறப்பு அபிேஷகம் செய்து தொட்டியில் நீரை நிரப்பி மகா தீபாராதனை நடத்தினர். இதில் கோயில் மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன், காஞ்சி மடம் நிர்வாகி சுந்தரவாத்தி யார், சாச்சா உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !