காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்
ADDED :2351 days ago
காஞ்சிபுரம்:சித்திரை ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவிலில், சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.பெருமாளின், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள், திருஅவதார திருநட்சத்திரமான, சித்திரை ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, காலையில், சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.மாலை, ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய, அஷ்டபுஜ பெருமாள், மாடவீதி வழியாக உலா வந்தார்.பின், கோவிலை வந்தடைந்ததும், ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது.