உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சித்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலில், முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சித்திரை மாத உற்சவத்தையொட்டி, சித்தி விநாயகர், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி தெய்வானை  சமேத முருகன் சுவாமிக்கு சிறப்பு வேள்வி பூஜைகளுடன் உலக நன்மை வேண்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் உள்பிரகார உலா, மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !