மூணாறு கருப்பசாமி கோயில் திருவிழா
ADDED :2344 days ago
மூணாறு:கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட்,பாக்டரி டிவிஷனில் கருப்பசாமி கோவில் திருவிழா இரண்டு நாட்களாக நடந்தது.அங்குள்ள விநாயகர் கோவிலில்
இருந்து நேற்று (மே., 12ல்) பால் குடம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது.
ஆணி காலணி அணிந்தும்,அலகு குத்தியும், முளைபாரி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.மூணாறு ஊராட்சி தலைவர் கருப்பசாமி பங்கேற்றனர்.