உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி உலா

திருமலையில் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி உலா

திருப்பதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 3ம் நாள் காலை சிம்ம வாகனத்தில் கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோவிலில், கடந்த சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன், 3ம் நாளான நேற்று காலை, 7 மணிமுதல், 8.30 மணிவரை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் கோவிந்தராஜஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு, 8 மணிக்கு வெண்மையான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் நாச்சியார்கள் உடன் வர கோவிந்தராஜபெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். இதை காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். இதில் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !