உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவமும், சக்தியும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது

சிவமும், சக்தியும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது

கோவை, சிவம் - சக்தி எனும் ஒழுக்கமும் வலிமையும் இல்லாமல் எதையும்நம்மால் சாதிக்க முடியாது என ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக நலன் கருதி மகாசக்தி பெருவேள்வி நிகழ்ச்சி நேற்று (மே., 13ல்) நடந்தது.பொன்விழா ஆண்டு விழா மலரை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:இந்தியா இந்து தர்மம் மிக்க நாடு. தர்மம் வலிமை பெற்றால் தான் நாடு வளர்ச்சி அடையும். சன்யாசிகள் இல்லாமல் தர்மத்தை நிலைநாட்ட முடியாது.

சக்தி என்பது வலிமையையும் சிவம் என்பது ஒழுக்கத்தையும் நிலைநாட்டக் கூடியது.எனவே சிவம் - சக்தி எனும் ஒழுக்கமும் வலிமையும் இல்லாமல் எதையும் நம்மால் சாதிக்க முடியாது.

தர்மம் வலுப் பெறவும் நாடு செழிப்படையவும் இதுபோன்ற வேள்வி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், என்று அவர்பேசினார்.கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகை யில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டு சேவை நாட்டு பாதுகாப்பு ஆகியவையே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !