உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராமநவமி உற்சவம் காரமடையில் கோலாகலம்

ஸ்ரீ ராமநவமி உற்சவம் காரமடையில் கோலாகலம்

காரமடை:ஸ்ரீ ஜெயமாருதி சேவா சங்கம் சார்பில் காரமடையில், 33 ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.சித்திரை மாத சுக்ல பட்ஷத்தில் வரும் நவமி திதி ஸ்ரீ ராம நவமி வைபவ மாக கொண்டாடப்படுகிறது. காரமடை சொர்க்கவாசல் வீதியில் ஸ்ரீஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் கடந்த ஞாயிரன்று ஸ்ரீ ராமநவமி உற்சவம் துவங்கியது. நாளை (மே., 15ல்) நிறைவடைகிறது.

ஸ்ரீ விஷ்வக்சேனர் ஆராதனம், ரக்ஷாபந்தனம், புன்யாக வாசனம், ஆகியவற்றுடன் துவங்கியது. நேற்று (மே., 13ல்) விஷ்வக்சேனர் ஹோமம், ஸ்ரீ ராமஆஞ்சநேய ஹோமங்கள், உலக நலன்வேண்டி மகா சுதர்ஸன ஹோமம் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது. நாம சங்கீர்த்தனம், சுவாமி திருக்கல்யாண வைபவம், நிறைவு நாளான நாளை (மே., 15ல்) ரங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆஞ்ச நேயருக்கு, பால் அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை கொண்ட வடைமாலை சாத்துப்படி மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடு களை ஸ்ரீ ஜெயமாருதி சேவா சங்கத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !