நாம் மகான்கள் அல்ல!
ADDED :2338 days ago
புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். “தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த பரிசு இது தானா’ என உரிமையுடன் கடவுள் மீது கோபம் கொள்கின்றனர். நோய் என்பது அவரவர் செய்த கர்ம வினையின் பயன். முற்றும் துறந்த மகான்கள் கூட நோய்களால் அவதிப்பட்டுள்ளனர். ஆதிசங்கரர் வயிற்றுவலியாலும், ரமணர் புற்றுநோயாலும் சிரமப்பட்டனர். அவர்களுக்கே அந்த கதி என்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? விரைவில் நலம் பெற கடவுளிடம் வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.