மயூரநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2336 days ago
வாடிப்பட்டி: பரவையில் மயூரநாதர் கோயில் வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழா 12 நாட்கள் நடக்கிறது. நேற்று முன் தினம் மாலை மாப்பிள்ளை அழைப்பும், சீர்வரிசையுடனும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நேற்று ஸ்ரீவள்ளி, தேவசேனா, சுவாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.