வேதபுரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம்
ADDED :2485 days ago
புதுச்சேரி : புதுச்சேரி வேதபுரீஸ் வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதியுலா நேற்று முன்தினம் நடந்தது.
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் 33ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் ஆராதனைகளும், தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சந்திரசேகர் வெள்ளிப்பல்லக்கில் வீதியுலாவும், காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி திருவீதியுலாவும், அதைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் வீதியுலா உற்சவம் நடந்தது. வரும் 17ம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.