முருகப்பெருமானுக்கு திரிசதி அர்ச்சனை
ADDED :2337 days ago
வெள்ளகோவில்: மக்கள் சுபிட்சமாக வாழவும், திருமணத் தடை நீங்கவும், வேண்டி ஆறுமுக பெருமானுக்கு, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது.
வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தில் தையல் நாயகி, உடனமர் வைத்தீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், வாரந்தோறும், செவ்வாயன்று, மதியம், 1:00 மணி அளவில் சத்ரு சம்ஹார திரிசதி அபிஷேக, அர்ச்சனை நடந்தது.பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் தங்களது ஜாதகத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து இந்த சிறப்பு வழிபாடு நடப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.