கேலி பேச்சு வேண்டாம்
ADDED :2386 days ago
ஒருவரது உருவத்தை, குணத்தை கேலி செய்யக்கூடாது. இதற்காக தன் மனைவியை நாயகம் கண்டித்தார்.
ஒருமுறை குள்ளமாக இருந்த ஸபியா என்பவரை கேலி பேசினார் ஆயிஷா. இதையறிந்த அவர், “அவரைப் பற்றி நீ கூறிய வார்த்தை மிக பொல்லாததாகும். அதை கடலில் விட்டால், அதுவும் கூட கலங்கிப் போகும்” என கோபித்தார். மற்றவர் உருவம், குணம், ஏழ்மை கண்டு ஏளனமாக பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமல்ல! உலகில் நிறைவானவர் என்று யாருமில்லை. மற்றவர் குறைகளை தேடுபவனை இறைவன் கவனிக்கிறான். தக்க சமயம் பார்த்து அவனை கேவலப்படுத்துவான். குறை சொல்பவரின் குறைகளை இறைவன் துப்பறிய ஆரம்பித்தால், அவரவர் வீட்டிலேயே அவமானப்பட நேரிடும். மற்றவரிடம் குறை இருந்தாலும், அதை பொறுத்துக் கொள்பவரிடம் உள்ள குறைகளை இறைவன் மன்னிக்கிறான்.