உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பிருந்தால் உலகம் சொந்தமாகும்

அன்பிருந்தால் உலகம் சொந்தமாகும்

● மனதில் அன்பை நிரப்புங்கள்;  உலகம் உங்களுக்கு சொந்தமாகி விடும்.
● பூமியில் பிறந்தால் மட்டும் போதாது; இளமையிலேயே சாதனை படைக்க வேண்டும்.  
● ஆத்திரம் கண்களை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுங்கள்.  
● தியானத்தில் வெற்றி பெறும் போது வாழ்வில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
● பக்தி ஒன்றைத் தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை.
● தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள், துன்பத்திலிருந்து விடுபடுவர்.
● எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் மனதை மாற்ற பழகுங்கள்.
● பிறரிடம் குற்றத்தையே பார்ப்பவன் நாளடைவில் குற்றவாளியாகும் வாய்ப்பு அதிகம்.
● உலக வாழ்வில் பற்று குறைந்தால் மனதில் நிம்மதி கிடைக்கும்.
● மனதில் தூய்மை இருந்தால் காணும் காட்சி எல்லாம் பரிசுத்தமானதாகும்.  - சொல்கிறார் சாரதாதேவியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !