சென்னையில் ஸ்ரீ ராமாயணகத்யம் நூல் வெளியீடு
ADDED :2436 days ago
சென்னை:மாயூரம் தேவங்குடி பிரும்மஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய, இரண்டு நூல்களை, காஞ்சி பீடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வெளியிட்டார்.மாயூரம் தேவங்குடி பிரும்மஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ ராமாயணகத்யம், ஸ்ரீபாகவத ஸங்க்ரஹ என, இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம், இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த நூல்களை, அக் ஷய திருதியை நாளான, 7ம் தேதி, காஞ்சி மடத்தில் நடந்த விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். நூலாசிரியர் சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள், பிரவசனம் புரிபவர்களுக்கு வழிகாட்டி; பிரவசன மார்க்கதரிசி என, ஸ்ரீ காமகோடி ஜகத்குரு அவர்களால், விருது அளித்து, கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.