உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் : தொடக்கம்

சாணார்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் : தொடக்கம்

சாணார்பட்டி:சாணார்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (மே 15) தொடங்கு கிறது. யாகசாலையில் சிவனுக்கு 5, ஐயப்பனுக்கு 5, துர்க்கையம்மன், பாலமுருகன், பைரவர், ஆஞ்சநேயர், கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 6 என மொத்தம் 16 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று (மே., 15ல்) காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மாலையில் முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை (மே 16) இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்க உள்ளது. நாளை மறுநாள் (மே 17) காலை நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்க உள்ளது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று காலை முதல் பகல் முழுவதும் அன்னதானம் நடைபெறும். ஊர் பொதுமக்கள் சார்பில் கோயில் திருப்பணி குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !