உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 200 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருக்கல்யாணம்!

200 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருக்கல்யாணம்!

பெ.நா.பாளையம் :பெரியநாயக்கன்பாளையம் அருகே 200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூர், பழையபுதூர் ஆகிய ஊர்களுக்கு இடையே ஆதிமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகி றார். இங்கு, ஆண்டாள் திருப்பாவை சபா சார்பில் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, மூலவருக்கு திருமஞ்சனம் சாத்துதல் நடந்தது. உற்வச மூர்த்திகள் ஊஞ்சலில் பட்டுடுத்தி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த
னர்.திருமண விழாவையொட்டி பஜனை, ஊர்வலம் நடந்தது. பக்தர்களுக்கு தாம்பூலம், பிரசாதம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜேந்திரன், செந்தில்குமார் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !