திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் வைகாசி விசாக விழா
ADDED :2447 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா தேரோட்டம் நாளை மறுநாள் (மே 17) நடப்பதால் தேர்களைபுதுப்பிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 9ல்
கொடியேற்றத்துடன்துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (மே 17) மாலை தேரோட்டம் நடக்கிறது. ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரும், சிநேக வல்லி அம்மன் மற்றொரு தேரிலும் வீதி உலா வருவார்கள்.
இதற்காக தேர்களை அலங்கரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இரு தேர்களையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தல், அலங்கரிக்கப்பட்ட திரைசீலைகள் கட்டுவதற்காககம்பு கட்டும் பணிகளும் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும்.