உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளார் கிராமத்தில் அகத்தீஸ்வரர் வீதியுலா கேடயம், பிரபை தயார்

கிளார் கிராமத்தில் அகத்தீஸ்வரர் வீதியுலா கேடயம், பிரபை தயார்

கிளார்:கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், சுவாமி வீதியுலா செல்ல கேடயம், பிரபையுடன் கூடிய தண்டிகையை, பக்தர் ஒருவர் உபயமாக வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த கிளாரில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட, அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு, மானாம்பதியை சேர்ந்த சிவபக்தர், பொன்முடி என்பவர், சுவாமி வீதியுலா செல்ல கேடயம், பிரபையுடன் கூடிய தண்டிகை உபயமாக வழங்கினார்.காஞ்சிபுரம் மெய் கண்டார் பீடம், தொண்டை மண்டல ஆதினம் திருவம்பல தேசிக ஞானபிரகாச சுவாமிகள், கேடயத்தை, கோவிலில் முறைப்படி ஒப்படைத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

அகத்தீஸ்வரர் மகா மூலிகை நந்திய பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் செய்தார்.இனி வரும் உற்சவ நாட்களில், கேடயம், பிரபையில் அறம்வளர் நாயகியுடன் அகத்தீஸ்வரர் வீதியுலா செல்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !