வேங்கனூரில் கோயில் திருவிழா ரத்து!
ADDED :5052 days ago
வடமதுரை :அய்யலூர் வேங்கனூரில் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு நடந்தது. இதில் இரு குழுவினருக்கு இடையே கடந்த மாதம் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பணிகள் துவங்கின. இரு குழுவினரிடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியே விழா நடத்த முடிவு எடுத்தனர். இங்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, வடமதுரை போலீசார் இரு குழுவினரையும் அழைத்து பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால், "இரு தரப்பும் விழா நடத்த வேண்டாம். கோர்ட் தீர்ப்பு பெற்று நடத்தி கொள்ளுங்கள் என, போலீசார் தெரிவித்தனர். இரு குழுவினரும் ஏற்றுக்கொண்டு, திருவிழாவை ரத்து செய்தனர்.