பழநி மலைக்கோயிலில் யாகபூஜை
ADDED :2342 days ago
பழநி: வைகாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை, வழிபாடு நடந்தது.
பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதிஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல திருஆவினன்குடி கோயில், குழந்தைவேலாயுத சுவாமி தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.