திருப்பூர் தெய்வ சேக்கிழார் நாடகம் மெய் மறந்த பக்தர் கூட்டம்
ADDED :2342 days ago
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, தினமும், இரவு பெருமாள் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவ்வகையில், நான்காம் நாளான நேற்று (மே., 15ல்), ஸ்ரீ ஆதிஸ்வரர் டிரஸ்ட் சார்பில், நாடக ஆசிரியர் அறிவானந்தம் குழுவினர், தெய்வ சேக்கிழார் எனும் தலைப்பில் புராண நாடக நிகழ்ச்சி நடந்தது.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் வாழ்க்கை குறித்து நாடகம் நடந்தது. தத்ரூபமாக நடந்த நாடகத்தில், பக்தர்கள் மெய் மறந்து ஒன்றினர். தேர்த்திருவிழாவில், இன்று (மே., 16ல்) மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமாள் கருட சேவை ஆகியன நடக்கிறது.