உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

 சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதற்காக நேற்று காலை 7:30 மணிக்கு மங்களவாத்தியம் வாசிக்க ,8:30 மணிக்கு திருமுறைபாராயணம், வருணஜபயாகம் நடத்தப்பட்டது.

10:30 மணி முதல் 12:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபி ே ஷகம் நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் , பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள், அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதைதொடர்ந்து நேற்று மாலை இருக்கன்குடி, சாத்துார், ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !