பழநியில் நரசிம்மர் ஜெயந்தி விழா
ADDED :2496 days ago
பழநி: நரசிம்மர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பழநி பெருமாள் கோயில்களில் நரசிம்மருக்கு அபிஷேக, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.பழநி ராமநாத நகர் காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயிலில், சிறப்பு யாகம், பூஜையுடன் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள், பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்களிலும் நரசிம்மப் பெருமாளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.