உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி: சாணார்பட்டியில் கற்பக விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், விஷ்ணு துர்க்கை, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி, பைரவர், ஆஞ்சநேயர், கருப்பணசுவாமி, பாபார் சன்னதி கோயில்களுக்குகும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த மே 15 அன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை மிருத் சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் (மே., 16ல்) காலை 2ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன.நேற்று (மே., 17ல்) காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான குழுவினர் விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடத்தினர்.

அமைச்சர் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ், தொழிலதிபர்கள் அழகேஷ்வரன், செண்பகமூர்த்தி, மீனாட்சிசுந்தரம், பா.ஜ., நிர்வாகி தனபால் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமராசு, குருசாமிகள் பாண்டி, ஜெய்சிங், பிச்சை உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !