கமுதி அருகே கோயில் பொங்கல் விழா
ADDED :2493 days ago
கமுதி : கமுதி அருகே கொத்த பூக்குளம் சித்தி விநாயகர், முப்பிடாதி அம்மன் பொங்கல் விழா நடந்தது. சித்தி விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொங்கல் வைக்கப் பட்டது. பின் அன்னதானம் நடந்தது. குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு பஜனைகள் நடந்தது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.