உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எரியோடு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

எரியோடு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

எரியோடு : எரியோடு அருகே சவடகவுண்டன்பட்டியில் சக்திவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், முருகன், முனியப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மே 15ல் கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (மே., 17ல்) காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் சுவாமிநாதன் வேதசிவாகம பாடசாலை நிர்வாகிகளான நாகராஜ், சரவணன் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !