சிந்தலவாடியில் தீர்த்த குட ஊர்வலம்
ADDED :2492 days ago
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, பூச்சாட்டுதல் கடந்த வாரம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று (மே., 17ல்) காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். அதன் பின், தீர்த்தத்தை, கோவிலில் நடப்பட்டிருந்த கம்பத்திற்கு ஊற்றி, சுவாமியை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.