அன்னூர் குமரன் குன்று தேர் வெள்ளோட்டம்
அன்னூர் : குமரன் குன்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 49 ஆண்டுகளாக தைப்பூச நாளில்
தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தேரின் அச்சு, சக்கரம் ஆகியவை பழுதடைந்து விட்டன.
இவற்றை மாற்றும்படி பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். இதையடுத்து இதற்கு, அறநிலையத்துறை சார்பில், நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக இரும்பு சக்கரம் மற்றும் அச்சு
பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து, வெள்ளோட்டம் நேற்று முன் தினம் 18ல், நடந்தது. காலை 9:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் என பல அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், அலங்கார பூஜை நடந்தது. காலை 10;40 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்கியது. தேர் ஜோடிக்கப்படாமல், இரும்பு சக்கரம் மற்றும் அச்சின் செயல்பாட்டை சோதிக்கும் வகையில், வெள்ளோட்டம், மலையை சுற்றி நடந்தது. சுவாமி உட்பிரகார உலா நடந்தது. மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.