உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பிச்சிபாளையத்தில் தீர்த்தக்குடத் திருவிழா

குப்பிச்சிபாளையத்தில் தீர்த்தக்குடத் திருவிழா

பெ.நா.பாளையம் : வைகாசி விசாக பவுர்ணமியையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் தீர்த்தகுடத் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிராமசாந்தி நடந்தது.

சனிக்கிழமை காலை, 7.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ அங்காளம் மன் திருக்கோவிலில் பம்பை, உடுக்கை வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட சக்திக் கரங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.இதில், திரளான பெண்கள் புனிதநீர் அடங்கிய தீர்த்தக்குடம் ஏந்தி வந்தனர். பின்னர், பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு, வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடந்தன.

மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4.00 மணியளவில் நடந்த மாவிளக்கு ஊர்வலத்தில் பெண்கள் தினைமாவு, தேங்காய் பழங்களை தட்டுகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். நேற்று (மே., 19ல்) காலை, 9.00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறை வடைந்தது. விழா ஏற்பாடுளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !