உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையத்தில் ராதை கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையத்தில் ராதை கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த ராதை, கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவ வைபவத்தில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் யாக வேள்வி நடந்தது.

மேட்டுப்பாளையம் நாமசங்கீர்த்தன குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐயப்பன் பஜனை மண்டபத்தில் ராதை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலையில் ஹரிபஜனை நடந்தது. தொடர்ந்து கோவை ஜெயராமன் பாகவதர் குழுவின் ராதா, மாதவ திருக்கல்யாண உற்சவ வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ராதை, கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியை பாடல்கள் மூலம் விளக்கினர்.இந்நிகழ்ச்சியில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் யாக வேள்வி நடத்தினர்.

இறுதியில் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாகவதர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !