வால்பாறை சக்திமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED :2334 days ago
வால்பாறை : வால்பாறை, காமராஜ் நகர் சக்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வால்பாறை காமராஜ் நகர் சக்திமாரியம்மன் திருக்கோவிலின், 20ம் ஆண்டு திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, நேற்று முன் தினம் (மே., 18ல்) காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமமும், 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:50 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வரும், 26 ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மஞ்சுபழனிச்சாமி, செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் மாடசாமி, தர்மகர்த்தா சின்னசாமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.