கிணத்துக்கடவு வேலாயுதசுவாமிக்கு பால் குடம்; கந்த சஷ்டி குழுவினர் வழிபாடு
ADDED :2334 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை ஒட்டி, கந்த சஷ்டி குழுவினர் பால் குடம் எடுத்தனர்.கிணத்துக்கடவு கந்தசஷ்டி குழுவினர் சார்பில், வைகாசி விசாகத்தை ஒட்டி நேற்று முன்தினம் (மே., 19ல்) பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரத்தில், பால் குடம் எடுத்து வந்தனர்.
அங்கிருந்து மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின், மலை மேல் சென்று வேலாயுத சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர்.இதனை தொடர்ந்து, வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு, வேலாயுத சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.