பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம்
ADDED :2381 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (மே., 18ல்), பவுர்ணமியை முன்னிட்டு, உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (மே., 18ல்), பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ் வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்தது. 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.