உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய்வேலியில் மூகாம்பிகை கோவிலில் வைகாசி விசாக விழா

நெய்வேலியில் மூகாம்பிகை கோவிலில் வைகாசி விசாக விழா

நெய்வேலி: நெய்வேலியில் தாய் மூகாம்பிகை கோவிலில், வைகாசி விசாக விழா மற்றும் கோவில் கும்பாபிஷேகத் திற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியது.

நெய்வேலி நகரம் வட்டம் 8ல் உள்ள நேரு பூங்கா அருகில் எழுந்தருளியுள்ள தாய் மூகாம்பிகை கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சந்தன காப்பு அலங்காரம், மஹா மேரு நவாவரண பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

இந்த பூஜைகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோவில் திருப்பணியை முன்னிட்டு, வரும் ஜூன் 6 ம் தேதி காலை 10 மணிக்கு அம்பிகை மஹா மேரு கணபதி, பாலமுருகன், கும்பம் பாலாயம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !