உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு அருகே பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு அருகே பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு: சி.என். பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ் வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு,நேற்று முன்தினம், (18ம் தேதி) ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழாவை முன்னிட்டு அன்று மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ் வரி, தண்டாயுதபாணி, நால்வர், சித்தர் ஜீவசமாதிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில உலா வந்தார். ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9:30 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !