உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மங்கலம்பேட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த திருக் கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கடந்த (11ம் தேதி) காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

கடந்த 17ம் தேதி இரவு 7:30 மணிக்கு நடந்த ஆதிகேசவ பெருமாள், வேதவள்ளி நாச்சியார் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று (மே., 19ல்) காலை 6:00 மணியளவில் தேர்த் திருவிழா நடந்தது. இன்று (20ம் தேதி) இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !