உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா

மோகனூர் புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா

மோகனூர்: புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், புனித செல்வநாயகி அன்னை ஆலயம் உள்ளது.

இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 16 மாலை, 6:00 மணிக்கு, இளைச்சிப்பாளையம் பங்குதந்தை,
ஆரோக்கியராஜ் தலைமையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ல் பங்கு தந்தை பிரகாஷா தலைமையில், மாதா வணக்க நாள் நடந்தது. நேற்று முன்தினம் 18 ல், காலை, 8:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட புதிய குழு ஸ்டேன்லி சேவியர் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனித செல்வநாயகி அன்னை எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை சாற்றியும், புனிதரை வணங்கினர். நேற்று 19ல் காலை, 7:00 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !