உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல் கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல்: நாமக்கல், தேவேந்திரபுரம் மகா மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. நாமக்கல் அடுத்த, கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

வைகாசி மாதம் திருவிழா நடக்கும். நடப்பாண்டு விழா, கடந்த, 12ல் காப்புக்கட்டுதலுடன்
துவங்கியது. நேற்று மே., 19ல் காலை, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, ஐயப்பன் கோவிலில் இருந்து, கொசவம்பட்டி வரை ஊர்வலமாக சென்றனர். இன்று மே., 20ல் காலை வடிசோறு, மாவிளக்கு, தீக்குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை மே., 21ல் காலை பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நடைபெறவுள்ளது. வரும், 22ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்படுகளை விழா
குழுவினர், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !