பழநி கோயிலில் வைகாசி விசாகம் நிறைவு
ADDED :2329 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மே 17ல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், மே 18ல் வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார்.நேற்று இரவு தங்கமயில் வாகனத்தில் திருவுலா வந்தார். விழாவின் கடைசிநாளான இன்று காலை மற்றும் இரவு அலங்கார சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை உலா வருகின்றனர். இரவு கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும்.